புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1,830 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை10,891 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரசின் உத்தரவை மீறிய வகையில் 587 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் கரோனா உறுதி செய்யப்பட்டு 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மாஹே பகுதியில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தற்போது நான்கு பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.