சர்வதேச அளவில் நான்காவது மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க்கை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் ஓடும் அனைத்து ரயில்களையும் மின்சாரத்தில் இயக்க ஏதுவாக ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது ட்விட்டரில்,"பிரமதர் மோடி ஆட்சியின் கீழ் உள்கட்டமைப்பில் இந்தியன் ரயில்வே பல மைல்கற்களை எட்டியுள்ளது. 2014-20 காலகட்டத்தில் மட்டும் சுமார் 18,065 கிலோமீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கட்டது. இது 2008-14 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 371 விழுக்காடு அதிகமாகும்" என்று பதிவிட்டுள்ளார்,
அத்துடன் கிராபிக் புகைப்படம் ஒன்றையும் அவர் இணைத்துள்ளார். அதில் 2008-2014 காலகட்டத்தில் 3,835 கி.மீ ரயில் பாதை மட்டுமே மின்மயமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், 2019-2024 காலகட்டத்தில் கூடுதலாக 28,143 கி.மீ ரயில் பாதையை மின்மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும், அதில் 5,642 கி.மீ. பாதையை மின்மயமாக்கும் பணிகள் அக்டோபரில் நிறைவடைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்"தேசிய தலைநகர் பகுதியில் டீசல் என்ஜின்களை பயன்படுத்தாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை இதுவாகும். இது தலைநகர் பகுதியில் தூய்மையான மற்றும் பசுமையான சூழலை உருவாக்க பங்களிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’அதானிக்குக் கடன் வழங்கினால், எஸ்பிஐ பசுமைப் பத்திரங்களை விற்போம்’ - பிரான்ஸ் நிறுவனம்