உத்தரப் பிரதேச மாநிலம் ஃபருக்காமாபாத் அருகே காத்தாரியா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒருவர், தனக்கு பிறந்தநாள் என்று கூறி 20 குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துள்ளார்.
வெகுநேரமாகியும் வீடு திரும்பாத குழந்தைகளைத் தேடி அந்த நபரின் வீட்டுக்கு பெற்றோர் சென்றனர். அப்போது, தூப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் காட்டிய அந்த நபர், பெற்றோர்களை விரட்டி அடித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர், அந்த நபரிடம் சமரசம் செய்ய முயன்றனர். அப்போது, அந்த நபர் காவல் துறையினரை நோக்கி தூப்பாக்கிச்சூடு நடத்தி, கையெறிகுண்டுகளை வீசினார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து காவல் துறை துணை தலைமை இயக்குநர் கூறுகையில், "காத்தாரியா கிராமத்தில் 20 குழந்தைகள் பிணையில் அடைக்கப்பட்டுள்ளனர். தனக்கு பிறந்தாள் எனக் கூறி குழந்தைகளை அழைத்து, வீட்டின் அடித்தளக்தில் பிணையில் வைத்துள்ளார். குழந்தைகள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவர்" என்றார்.
இதையும் படிங்க : கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ்!