மே மாதம் 7ஆம் தேதி தொடங்கப்பட்ட வந்தே பாரத் திட்டம் ஜூன் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 454 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டு ஒரு லட்சத்து 7ஆயிரத்து 123 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். வந்தே பாரத் திட்டத்தின் முதல் கட்டத்தில் மே 7ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதி வரையில் 12 வெளி நாடுகளிலிருந்து 15 ஆயிரம் பேர் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
தற்போது முடிந்த இரண்டாம் கட்டத்தில் மே 17ஆம் தேதியில் இருந்து 22ஆம் தேதி வரையில் 103 விமானங்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. அதைத் தொடர்ந்து இலங்கை, மாலத்தீவிலிருந்து இந்தியர்களை அழைத்து வர இந்திய கடற்படையும் உதவியது.
மூன்றாம் கட்டத்தில் 31 நாடுகளிலிருந்து 337 விமானங்கள் இயக்கப்பட்டு 38 ஆயிரம் பேர், நாடு திரும்ப உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இதுவரை தாயகம் வந்தவர்களில் 17ஆயிரத்து 485 குடிபெயர்ந்தோரும் 11 ஆயிரத்து 511 மாணவர்களும் 8 ஆயிரத்து 633 தொழில்துறை அலுவலர்களும் ஆவர். இதுவரை 32 ஆயிரம் பேர் மட்டும் நேபாளம், பூடான், வங்கதேசம் உள்ளிட்ட எல்லைகளில் இருந்து நாடு திரும்பினர்.
மேலும், 3 லட்சத்து 48 ஆயிரத்து 565 பேர் நாடு திரும்ப மத்திய அரசை தொடர்பு கொண்டு வந்தே பாரத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். வந்தே பாரத் திட்டத்தில் முக்கிய காரணத்தின் அடைப்படையில் வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியவர்கள், தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள். இதில், கர்ப்பிணிகள், முதியோர், மாணவர்கள், வீசா முடிந்தவர்கள் இந்த பட்டியலில் அடங்குவர்.
இதையும் படிங்க: 'இதுவே சரியான நேரம், சரியான வாய்ப்பு' - ஆஸ்திரேலியப் பிரதமரிடம் மோடி பேச்சு