பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசேன் ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 'காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விரக்தியின் விளிம்பில் உள்ளன. ஆகவே, அவர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அமித் ஷா மீது அவதூறு பரப்பி அறிக்கைகள் வெளியாவதுக்கும் இதுவே காரணம்' என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜக வசம் உள்ளனர். அவர்களை விலை கொடுத்து வாங்கிவிட்டனர் என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ஷாநவாஸ், 'காங்கிரஸ் தலைவர்களே எம்.எல்.ஏ.க்களை வாங்க முடியும் என்று சொல்லும்போது நாங்கள் என்ன செய்ய முடியும்?' என்றார்.
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்தும் பதிலளித்தார். நிர்பயா வழக்கில் தண்டனைக் கைதிகள் நால்வரையும் வருகிற 20ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்குத் தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும் அவர் கூறினார்.
மேலும் டெல்லி கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தங்களின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மத்தியப் பிரதேச அரசியலில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் பாஜக வசம் உள்ளதாகவும், அவர்கள் இன்னும் இரு தினங்களில் டெல்லியில் பேட்டியளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: நாராயணசாமி வெளியே, நமச்சிவாயம் உள்ளே? - புதுவையில் தொடங்கிய புதுக்கணக்கு