வேளாண் மசோதா விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று மக்களவையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. முன்னதாக, மசோதா தாக்கலின் போது மாநிலங்களவைத் துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிடம் அத்துமீறி அவமதிப்பான முறையில் நடந்துகொண்டதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்களின் இடை நீக்க முடிவை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு மாநிலங்களவைத் தலைவர் செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முற்பகலில் மாநிலங்களவையை புறக்கணிக்கும் முடிவை எடுத்தன. இதைத்தொடர்ந்து மக்களவையையும் இன்று ஒரு நாள் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இதையும் படிங்க: 8 இடைநீக்க எம்.பிக்களுக்கு ஆதரவாக சரத் பவார் உண்ணாவிரதம்