ETV Bharat / bharat

வெளிநாட்டு இந்தியர்களை மீட்க, ஆபரேஷன் சேது திட்டம்! - ஆபரேஷன் சமுத்ரா சேது

டெல்லி: கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, இந்திய குடிமக்களை வெளிநாட்டிலிருந்து திருப்பி அழைத்துவரும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியக் கடற்படை ஆபரேஷன் 'சமுத்ரா சேது' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

covid-19  coronavirus  Operation Samudra Setu  வெளிநாட்டு இந்தியர்களை மீட்க, ஆபரேஷன் சேது திட்டம்  ஆபரேஷன் சமுத்ரா சேது  கரோனா பாதிப்பு, வெளிநாட்டு இந்தியர்கள்

author img

By

Published : May 7, 2020, 11:59 PM IST

சமுத்ரா சேது திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய நாட்டினரை மீட்க இந்திய கடற்படையின் ஐ.என்.ஏ ஜலாஷ்வா வியாழக்கிழமை காலை(மே.7) மாலத்தீவில் உள்ள மாலே துறைமுகத்திற்குள் நுழைந்தது.

இந்தக் கப்பல் வெள்ளிக்கிழமை மாலத்தீவில் இருந்து கொச்சிக்கு புறப்படும். இதில் ஏறக்குறைய 1,000 இந்தியர்கள் கேரளா திரும்புகின்றனர். இந்தக் கப்பல் கடந்த 5ஆம் தேதி மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டது.

வளைகுடா நாடுகளில் இருந்து சிக்கித் தவிக்கும் குடிமக்களை அழைத்து வர மொத்தம் 14 கப்பல்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு கப்பல்கள் மே.5 ஆம் தேதி அதிகாலை பயணத்தைத் தொடங்கின.

இந்தக் கப்பல்களில், சந்தேகத்திற்குரிய கோவிட் மக்களைக் கையாள்வதற்காக வகுக்கப்பட்டுள்ள நிலையான நெறிமுறையின்படி தகுந்த இடைவெளி மற்றும் கிருமிநாசினி சுத்திகரிப்பு போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. இது தொடர்பாக கடற்படையின் மூத்த அலுவலர் கூறுகையில், “14 கப்பல்கள் காத்திருப்புடன் மத்திய அரசின் வழிமுறைகளுக்காகக் காத்திருக்கின்றன. அரசாங்கம் வழிகாட்டுதல்களை வெளியிட்டவுடன் அந்தக் கப்பல்கள் பயணத்தை தொடங்கும்” என்றார்.

வெளிநாட்டு இந்தியர்களை மீட்க, ஆபரேஷன் சேது திட்டம்

புதன்கிழமை தொடங்கப்பட்ட ஆபரேஷன் சமுத்ரா சேது திட்டம் குறித்து கூறுகையில், “ கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, இந்தியக் குடிமக்களை வெளிநாட்டிலிருந்து திருப்பி அழைத்துவரும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியக் கடற்படையால் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: பொது போக்குவரத்து விரைவில் தொடங்கும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.