ETV Bharat / bharat

300 புள்ளிகள் வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்! - 300 புள்ளிகள் வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் வர்த்தகத்தின் நிறைவு நாளான இன்று 300 புள்ளிகள் வீழ்ச்சியுடன் தொடங்கியது.

Stock open  Stock market in India  Sensex  BSE  NSE  Nifty  Trade  Stock market  business news  300 புள்ளிகள் வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!  இன்றைய பங்குச் சந்தை

author img

By

Published : Apr 3, 2020, 11:11 AM IST

இந்தியப் பங்குச் சந்தைகள் வர்த்தகத்தின் நிறைவு நாளான இன்று தொடக்கத்திலேயே 300 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து சிவப்பு கோடுக்கு சென்றது.

மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) சென்செக்ஸ் 351.32 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 27,913.99 ஆக இருந்தது. இதேபோல், தொடக்க அமர்வில் என்.எஸ்.இ. நிஃப்டி 49.55 புள்ளிகள் குறைந்து 8,204.25 ஆக இருந்தது.

ராம நவமியை முன்னிட்டு பங்குச் சந்தைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை இரண்டும் மூடப்பட்டன.

அதேபோல் உலோகம் மற்றும் பொன் உள்ளிட்ட மொத்த பொருட்கள் சந்தைகளும் மூடப்பட்டன. அந்நிய செலாவணி மற்றும் பொருட்களின் எதிர்கால சந்தைகளிலும் வர்த்தக நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை.

புதன்கிழமை வர்த்தக நிறைவில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1,203 புள்ளிகள் அல்லது 4.08 சதவீதம் குறைந்து 28,265 ஆகவும், நிஃப்டி 50.344 புள்ளிகள் அல்லது 4 சதவீதம் குறைந்து 8,254 ஆகவும் இருந்தது.

இதையும் படிங்க: இ.எம்.ஐ. தளர்வு விருப்பத்தை வாடிக்கையாளர்களிடம் வழங்கிய ஆக்ஸிஸ் வங்கி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.