ETV Bharat / bharat

வென்ட்டிலேட்டர்கள் தேவை மிகக் குறைவு - ஹர்ஷ் வர்தன் - இந்தியாவில் கரோனா

டெல்லி: இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 0.33 விழுக்காட்டினருக்கு மட்டுமே வென்ட்டிலேட்டர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

Harsh Vardhan
Harsh Vardhan
author img

By

Published : Apr 30, 2020, 12:00 PM IST

நாடு முழுவதும் உள்ள லயன்ஸ் கிளப் உறுப்பினர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலி வாயிலாகக் கலந்துரையாடினார். அப்போது பேசிய அமைச்சர், "இந்தியாவில் தீநுண்மி பரவல் இரட்டிப்பாகும் காலம் கடந்த மூன்று நாள்களாக 11.3 நாள்களாக உள்ளது. இந்தியாவில் தீநுண்மி தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் மூன்று விழுக்காட்டினர் உயிரிழக்கின்றனர். சர்வதேச அளவில் இந்தச் சராசரி ஏழாக உள்ளது.

இந்தியாவில் உயிரிழந்தவர்களில் 86 விழுக்காட்டினருக்கு ஏற்கனவே சர்க்கரை, கல்லீரல், இதய பிரச்னைகள் இருந்துள்ளன. கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 2.34 விழுக்காட்டினர் மட்டும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1.5 விழுக்காட்டினருக்கு மட்டுமே செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. 0.33 விழுக்காட்டினருக்கு மட்டுமே வென்ட்டிலேட்டர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வரும் காலங்களில் தேவையான அளவுக்கு நம்மிடம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், வென்ட்டிலேட்டர்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், முகமூடிகள் ஆகியவை உள்ளன. கரோனா தொற்றைக் கண்டறிய நாடு முழுவதும் 16 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கும் இடமும் 288 அரசு கரோனா கண்டறியும் சோதனைக் கூடங்களும், 97 தனியார் கரோனா கண்டறியும் சோதனைக் கூடங்களும் உள்ளன.

இதன்மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 60 ஆயிரம் பரிசோதனைகளை நம்மால் மேற்கொள்ள முடிகிறது. இதை ஒரு லட்சமாக உயர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம்.

கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டறிய அதிக காலம் தேவைப்படுகிறது. இந்தக் காலத்தில் ஊரடங்கும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஒருவருக்கு தீநுண்மி தொற்று இருக்கிறதா என்பதை விரைவில் கண்டறிய உதவும் கருவிகளை உருவாக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தேவையான நிதியுதவியை அளித்துவருகிறது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட சர்வதேச சுகாதார அவசர நிலைகளை இந்திய வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறது. அதேபோல இந்த முறையும் கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்டுவரும்" என்றார்.

இதையும் படிங்க: ஏழைகளைக் காக்க 65 ஆயிரம் கோடி அவசியம் - ராகுலிடம் ராஜன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.