கேரள அரசு கரோனா வைரஸ் காரணமாக மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதனால், மதுபான கடைகளில் சில தூரம் தள்ளி தள்ளி நின்று பொதுமக்கள் மதுபானத்தை வாங்கிச் சென்றனர்.
இதற்கு முடிவுகட்டும் வகையில் புதிதாக யோசனை தெரிவிக்கிறோம் என்ற பெயரில் கேரளாவில் அலுவா பகுதியைச் சேர்ந்த ஜோதிஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, "கரோனா அச்சுறுத்தலை சமாளிக்க அரசு போராடிவரும் நிலையில், இந்த மனு நீதித் துறையை கேலிசெய்யும் வகையில் உள்ளது.
பொதுநலன் கருதி அவசர வழக்கிற்கு மட்டும்தான் நீதிமன்றத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தத் தனிநபரின பொறுப்பற்ற செயல் கண்டிக்க வேண்டியது" எனத் தெரிவித்தார்.
மேலும், மனுதாரர், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததால் அபராதமாக ரூ.50 ஆயிரம் பணத்தை இரண்டு வாரங்களுக்குள் முதலமைச்சரின் நிவாரண நிதிக்குச் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து: முதலமைச்சர் நிவாரணம்