கரோனா பரவலை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லாமல் இருப்பதால் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் இது தொடர்பாக இன்ஃபோசிஸ் தலைமை அதிகாரி நந்தன் நீல்கேனி கூறுகையில், “கரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட இந்த ஊரடங்கால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் குறிகிய காலம் மட்டுமே பயன்பெறுவார்கள். அவர்கள் நீண்ட காலம் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
வகுப்பறைக்கு சென்று புத்தங்களை வைத்து படித்தால் மட்டுமே படிப்பது போல் என்று அல்லாமல், இந்த நடைமுறையை மாற்றி அமைப்பதன் மூலம் மாணவர்கள் மேலும் எளிமையாக கல்வி பயிலமுடியும்” என தெரிவித்தார்.
மேலும், “உலகம் நாம் எதிர்பாராத அளவிற்கு மாற்றங்களை கண்டு வேகமாக மாறிவருகிறது. ஆகவே, காலத்திற்கு ஏற்றாற்போல் நாமும் மாறவேண்டும். மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையும் விரைவில் மாறும்” எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'நிறுத்துங்க ஆதிக்கத்த நிறுத்துங்க' - அமேசான் நிறுவனருக்கு எலான் மஸ்க் கண்டனம்