தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோக நகை வியாபாரிகள் தங்கள் கடைகளின் பாதுகாப்பு கருதி எப்போதும் பாதுகாப்புக்கு ஆள் வைத்திருப்பார்கள். அந்த நிலை தற்போது வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துவருகிறது. இந்த நேரத்தில் மேற்கு வங்க மாநிலம் ஹாடில்யா பகுதியிலுள்ள ஒரு கடையில் வெங்காயம் திருடப்பட்டது. இரவு நேரத்தில் கடைக்குள் புகுந்த திருடர்கள் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வெங்காயத்தை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து சுதாஹட்டா காவல் நிலையத்தில் காய்கறி வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மற்றொரு கடையில் மூன்று சாக்குகளில் வெங்காயம் திருடப்பட்டது. வெங்காயம் மட்டுமின்றி ஒரு குவிண்டால் இஞ்சியையும் அவர்கள் திருடியுள்ளனர். இதன் சந்தை விலை ரூ.3ஆயிரம்.
இதையும் படிங்க: வெங்காய விலையைக் கட்டுப்படுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு!