நொய்டாவிலுள்ள ஹல்டிராமின் கட்டடத்தில் அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 42 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் இறந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். விபத்து ஏற்பட்ட இடத்தில் இடத்தில் இரண்டு கட்டடங்கள் இருந்தன. அதில் ஒன்று உற்பத்தி கட்டடம். மற்றொரு கட்டடம் குளிரூட்டல், பராமரிப்புப் பணிக்காக உபயோகிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழு அலுவலர் கூறுகையில், "சுமார் 22 பேர் பணிபுரிந்த பராமரிப்புப் பிரிவில் ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தைத் தொடர்ந்து உள்ளே இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும் இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் சஞ்சீவ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து காரணமாக இந்தக் கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: மிக நீண்ட பட்ஜெட் உரை அல்ல வெற்று உரை - ராகுல் காந்தி