இந்தியா-சவுதி இடையே மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் ஒப்பந்தம் குறித்து டெல்லியைச் சேர்ந்த மூத்த செய்தியாளரும், எழுத்தாளருமான பூஜா மேக்ரா விவரிக்கிறார். அதில், 'பிரதமர் மோடியின் இரண்டு நாள் பயணத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள், இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் எரிசக்தி உறவுகளை ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்தக்கூடும். இந்தியன் ஸ்ட்ராடிஜிக் பெட்ரோலியம் ரிசர்வ் லிமிடெட் (Strategic Petroleum Reserves Ltd) மற்றும் சவுதி அரம்கோ (Saudi Aramco) இடையேயான பூர்வாங்க ஒப்பந்தம் கர்நாடகாவின் (Karnataka) பதூரில் (Padur) வரவிருக்கும் இரண்டாவது எரிபொருள் இருப்பு வசதியில் பெரிய பங்கை ஏற்படுத்தும்.
கடந்த ஆண்டு, படெல்லி, ஒடிசா மற்றும் பாடூரில் உள்ள சண்டிகோலில் 6.5 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கு ( Million Metric Tonnes- எம்.எம்.டி.) மூலோபாய பெட்ரோலிய இருப்பு வசதிகளுக்கு ஒப்புதல் அளித்தது. அந்த வகையில் கூடுதலாக மூன்று இடங்களில் கச்சா எண்ணெய் இருப்புகள் - விசாகப்பட்டினம் (1.33 எம்எம்டி), மங்களூரு (1.5 எம்எம்டி) ) மற்றும் பதூர் (2.5 எம்.எம்.டி)எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் எரிபொருள் நிலையங்கள் அமைத்தல் உட்பட கீழ்நிலை துறையில் ஒத்துழைப்புக்காக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் சவுதி அரேபியாவின் அல் ஜெரி நிறுவனம் மேற்கு ஆசியா பிரிவு கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களின் இந்த முதலீடுகள் - எண்ணெய் வழங்கல், சந்தைப்படுத்தல், பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் மசகு எண்ணெய் வரை சுத்திகரிப்பு என இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றல் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும்.
இதுமட்டுமின்றி சவுதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான அரம்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய எண்ணெய் நிறுவனமான அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி ஆகியவை இந்திய அரசு நடத்தும் சுத்திகரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்புடன் முத்தரப்பு ஒப்பந்தத்தை முடித்தன. இந்த திட்டம் உலகின் மிகப்பெரிய கிரீன்ஃபீல்ட் சுத்திகரிப்பு நிலையமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சவுதி அராம்கோவின் எண்ணெய் வசதிகள் மீது தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்தன. இதனால் அதன் அன்றாட உற்பத்தி பாதியாக குறைந்தது. இதன் தாக்கம் உலக எண்ணெய்ச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனை எதிர்கொள்ள சவுதி அரேபியா உறுதியான முதலீடுகளுக்கு மதிப்பளித்து வருகிறது.
பொருளாதார உறவுகளின் எண்ணெய் அல்லாத பரிமாணமும் வலுவானது. வெளிநாடுகளில் 2.6 மில்லியன் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 18 பில்லியன் டாலர் பணம் அனுப்புகின்றனர். இந்தியா வளர்ச்சியுடன் ஒரு முக்கியமாக வளர்ந்து வரும் சந்தையும் கூட. எனவே வருமானம்- சாத்தியமான சில பொருளாதாரங்கள் சவுதியோடு பொருந்தக்கூடும். சவுதியில், பிரதமர் மோடி எதிர்கால முதலீட்டு முன்முயற்சி (எஃப்ஐஐ) மன்றத்தில் சிறப்புரையாற்றினார். அது 'பாலைவனத்தில் டாவோஸ்' என்று அழைக்கப்பட்டது. (டாவோஸ் என்பது உலகப் பெருமுதலீட்டாளர்கள் நடத்தும் ஒரு பகுதி.)
அப்போது சவுதி அரேபியா இந்தியாவில் எரிசக்தி, சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ், உள்கட்டமைப்பு, விவசாயம், தாதுக்கள் மற்றும் சுரங்கத் துறைகளில் 100 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்வதற்கான திட்டங்களை அறிவித்தது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். கச்சா எண்ணெய் மீதான தன்னிறைவை நோக்கி அமெரிக்கா நகர்ந்து வருகிறது. ஆகவே வரும் காலங்களில் இந்தியாவும், சீனாவும் கச்சா இறக்குமதியில் கவனம் செலுத்தும்.
பொதுவாகவே இந்தியா தனது கச்சாப் பொருட்கள் தேவைகளில் 80 விழுக்காடு இறக்குமதியை நம்பியுள்ளது. அதன் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த, நிலையான விலையில் எண்ணெய் இறக்குமதிக்கு நம்பகமான அரசுகளை இந்தியா தேடுகிறது. அதற்கு சவுதி அரேபியா கச்சிதமாகப் பொருந்தும். 2018-19ஆம் அண்டு சவுதி அரேபியாவில் இருந்து 40.33 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது. அதற்கு அடுத்த இடத்திலுள்ள ஈராக் நாட்டிலிருந்து இந்தியா 18 விழுக்காடு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. கச்சா எண்ணெய் நுகர்வில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நுகரும் நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது’ என்றார்.
இதையும் படிங்க: சுத்திகரிப்பு நிலையத்திற்கு லட்சம் கோடி ரூபாய் முதலீடு - பிரதமர் நரேந்திர மோடி