ETV Bharat / bharat

தொகுதி மறுசீரமைப்பு: ஆணையத்திற்கு 15 மக்களவை உறுப்பினர்கள் நியமனம்

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை, மக்களவை தொகுதிகளை அதிகரிக்கும் நோக்கில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்திற்கு 15 மக்களவை உறுப்பினர்களை சபாநாயகர் ஓம் பிர்லா நியமித்துள்ளார்.

சபாநாயகர் ஓம் பிர்லா
சபாநாயகர் ஓம் பிர்லா
author img

By

Published : May 29, 2020, 12:46 PM IST

அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளை அதிகரிக்கும் நோக்கில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்திற்கு 15 மக்களவை உறுப்பினர்களை சபாநாயகர் ஓம் பிர்லா நியமித்துள்ளார்.

முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லா, மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ஜிதேந்திர சிங், மக்களவை உறுப்பினர்கள் முகமது அக்பர் லோன், ஹஸ்னைன் மசூதி, ஜுகல் கிஷோர் சர்மா, ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் மார்ச் 7ஆம் தேதி ஓய்வுபெற்ற, உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், அங்குள்ள மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகள் அதிகரிக்கப்படவுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 114 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதில் 24 தொகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளது. இதுவரை 90 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரகசியக் கூட்டம் நடத்தும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்: கர்நாடக பாஜகவில் பிளவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.