வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 73ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த விழாவில் பங்கேற்க நேபாள நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை நேபாளத்தைச் சேர்ந்த ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தொடர்பாக சில பூசல்கள் நிலவி வரும் நிலையில் இந்த அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்திய - நேபாள எல்லைப் பகுதியான லிபுலேக், காலாபானி உள்ளிட்ட பகுதிகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பூசல் நிலவி வருகிறது.
முன்னதாக, இந்திய எல்லையைச் சேர்ந்த சில பகுதிகளை நேபாளத்துடன் சேர்த்து அந்நாட்டு அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், ஆயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்னதாக ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் எனவும் கூறி, ஒலி பரபரப்பைக் கிளப்பினார்.
இந்நிலையில், நேபாளப் பிரதமரை சுதந்திர தின விழாவிற்கு அழைத்துள்ளதாகக் கூறப்படும் இந்தத் தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக்க கருதப்படுகிறது.
இதையும் படிங்க: சுதேசி என்றால் வெளிநாட்டு பொருள் புறக்கணிப்பு என்று அர்த்தமல்ல: மோகன் பகவத்