மகாராஷ்டிரா, ஹரியானாவில் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும், இன்றைய தலைமுறைத் தொண்டர்களுக்குக்குமிடையே நடைபெற்றுவரும் உட்கட்சிப்பூசல், தேர்தல் முடிவுகளை பாதிக்குமோ எனக் கட்சித் தொண்டர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை ஈடுகட்டும் விதத்தில் ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல் களங்கள் சரியாகக் கையாளப்படவேண்டுமெனவும், காங்கிரஸ் மாநிலக் கட்சிகள் கோஷ்டிப்பூசல்களாலும், மூத்த, இளைய நிர்வாகிகள் இடையேயான சண்டைகளுடனும் இவ்வாறு இயங்கி வருவது, பாஜக வாக்கு சதவிகிதத்தில் மீண்டும் முன்னிலை வகிக்கப்போவதைத் தடுக்க எவ்விதத்திலும் உதவாது எனவும் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
பட்டியலினத்தைச் சேர்ந்த, ஹரியானா முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அஷோக் தன்வர், முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடாவால் ஆகியோர் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு, தொடர்ந்து விரக்தியில் ராஜினாமா செய்தது, காங்கிரஸ் வாக்கு வங்கியைப் பொறுத்தவரை தற்சமயம் முதலமைச்சர் மனோகர் லால் பாரிக்கருக்கு எதிராக திரும்பியுள்ளது என்றும் கட்சித் தலைவர்கள் சிலர் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதும் ஹூடா, மாநிலத்தின் 25 சதவிகித வாக்குவங்கியையும், பெரும்பான்மை ஜாட் இனமக்களின் வாக்குகளையும் ஈர்க்க வல்லவர் என்றும், ஹரியானா வாக்கு வங்கியைக் கூர்ந்து கவனித்துவரும் காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தவிர மகராஷ்டிராவிலும் ஆர். கே பாட்டிலின் ராஜினாமாவைத் தொடர்ந்து இதேபோன்று பல்வேறு கட்சிப் பூசல்கள்களுடன் பாஜக - சிவசேனா கூட்டணியை பாலாசாஹேப் விக்கே தலைமையில் சமாளிக்கக் அக்கட்சி தடுமாறி வருகிறது. ஆனாலும் கட்சித் தலைமை இத்தகைய இடையூறுகளைத் தாண்டி, வாக்கு வங்கியில் முன்னிலை வகிக்கும் எனக் கட்சி திட்டக்குழு உறுப்பினர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
ராகுல் தலைவராக இருந்தபோது மூத்த நிர்வாகிகளைக் கணக்கில் கொள்ளாமல் உண்டாக்கிய சில மாறுதல்களே இன்றையக் குழப்பத்திற்குக் காரணம் எனவும், ராகுல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தபோது ராகுல் ஆதரவாளர்கள் ஏ ஐ சி சி தேசியத் தலைமை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, இந்த மூத்தத் தலைவர்கள் - இளைஞர் அணியினர் இடையே நடைபெற்று வரும் இந்த வாக்குவாதம் இன்னும் தொடர்ந்துக் கொண்டிருப்பதையே காட்டுகிறது எனவும் சில தலைவர்கள் கூறுகின்றனர்.
மேலும் ராகுல் காந்தியின் தேர்வான சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரைத் தவிர்த்துவிட்டு, முதல்வர் தேர்விற்கு கட்சித் தலைமை ராஜஸ்தானில் அஷோக் கெலோட்டையும், மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத்தைத் தேர்ந்தெடுத்தது, இந்த உட்கட்சிப் பூசல்கள் இன்னும் மறைமுகமாகத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது என்பதையே காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:
கீழடியில் தொடர் ஆய்வு... மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!