பிரேஸில் நாட்டின் அல்தாமிரா நகரில் உள்ள சிறையில் கைதிகளுக்கிடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டு 57 கைதிகள் கொல்லப்பட்டனர். இதில், 16 பேரின் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அல்தாமிரா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் இவான்டர் பாண்ட்னெல் கூறும்போது, ’ ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்த கமாண்டோ வெர்மெலோ பிரிவினருக்கும், உள்ளூர் கிரிமினல் குழுவான கமாண்டோ கிளாஸ் ஏ பிரிவினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலை உச்சகட்டமாக ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டும், சிறைக்குத் தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர். தற்போது, சிறை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது’ என்றார்.
சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 57 கைதிகள் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.