ETV Bharat / bharat

ஒடிசாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதி விஷம் அருந்தி தற்கொலை! - Professor and Wife commit suicide in Odisha

புவனேஷ்வர்: ரூர்கேலாவில் தங்கியிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதி குழந்தை இல்லாததால் மனவிரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.

rourkela professor
author img

By

Published : Aug 20, 2019, 9:54 AM IST

Updated : Aug 20, 2019, 11:52 AM IST

ஒடிசா மாநிலத்தில் ரூர்கேலாவில் உள்ள என்.ஐ.டி.யில் உதவி பேராசிரியராக பணிபுரிந்துவந்தவர் ஜெயபாலன். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மாலினி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் ரூர்கேலாவின் கல்லுாரி குடியிருப்பில் வசித்துவந்தனர். இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது மாதங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயபாலனின் வீடு தொடர்ந்து திறக்கப்படாமல் இருந்ததைக் கண்டு சந்தேமடைந்து அருகில் குடியிருந்தவர்கள் கதவை தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படாததால் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பேரில் அங்குவந்த காவல் துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் உள்ளே ஜெயபாலனும் மாலினியும் விஷம் அருந்தி இறந்துகிடந்தனர். இதையடுத்து உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதைத் தொடர்ந்து காவல் துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகையில், ஜெயபாலன் எழுதிய நான்கு பக்க கடிதம் ஒன்று வீட்டில் கிடைத்தது. அந்தக் கடிதத்தில், தங்களுக்கு குழந்தை இல்லாததால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும், தங்களின் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை எனவும், இந்த முடிவுக்காக பெற்றோர்கள் தங்களை மன்னிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து காவல் துறையினர் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.

Last Updated : Aug 20, 2019, 11:52 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.