ETV Bharat / bharat

ஒடிசாவில் மகன்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட தாய்...! - mayurbhanj news

ஒடிசா: மயூர்பாஞ் மாவட்டத்தில் சதாபயா கிராமத்தில் வயதான பெண்மணி தனது இரண்டு மகன்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

odisha woman death
odisha woman killed by sons
author img

By

Published : May 23, 2020, 10:41 PM IST

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பங்கிரிபோஷி பொலிஸ் எல்லைக்குட்பட்ட சதாபயா கிராமத்தில் துளசி சிங் என்கிற வயதான பெண் தனது இரண்டு மகன்களான ரபி, ராஜ் கிஷோர் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (மே 21) அன்று தாய் துளசிக்கும் அவரது இரண்டு மகன்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மகன்கள் இருவரும் துளசியை மரக் கட்டையால் அடித்தனர்.

இரவு முழுவதும் வலியால் துடித்த துளசி அடுத்த நாள் காலையில் (மே 23) இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த பங்கிரிபோஷி காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் இரண்டு மகன்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:நெல்கொள்முதல் நிலையத்தின் இரவு காவலர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.