ETV Bharat / bharat

ஆயிரம் பள்ளிகளை மூட உத்தரவு! மாணவர்களுக்கு அதிரடி 'சலுகை' - Teacher's shortage issue

புவனேஷ்வர்: ஆசிரியர் பற்றாக்குறை சிக்கலால் 10 மாணவர்களுக்கும் வருகை குறைவாக உள்ள ஏறக்குறைய ஆயிரம் பள்ளிகளை  மூட ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் சமிர் ரன்ஜன் தாஸ் தெரிவித்துள்ளார்.

odisha schools
author img

By

Published : Jun 24, 2019, 1:37 PM IST

ஒடிசா அரசு 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 966 பொதுப்பள்ளிகளை மூட முடிவெடுத்துள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் சமிர் ரன்ஜன் தாஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், சில பள்ளிகளில் வெறும் இரண்டு, மூன்று மாணவர்கள்தான் வருவதாகவும், மாநிலத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை சிக்கலை சரிசெய்ய மாணவர்கள் வருகை குறைவாக உள்ள பள்ளிகளை மூட முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆசிரியர்களின் கடுமையான பற்றாக்குறையால், மாணவர்களுக்குத் தேவையான ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகளை அரசால் வழங்க முடியாது எனவும், மூடப்படவுள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அருகில் உள்ள மற்றப் பள்ளிகளுக்கும், அதோடு அங்குப் பயிலும் மாணவர்களும் அருகில் உள்ள மற்றப் பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளனர் என திட்டவட்டமாகக் கூறினார்.

இவ்வாறு வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்படும் மாணவர்களை ஊக்குவிக்க, அவர்களின் வருகைப் பதிவேட்டிற்கு ஏற்ப ரூ.3000, ரூ.4000, ரூ.6000 என சலுகை வழங்க அரசு முடிவு செய்துள்ளாகவும் அமைச்சர் தாஸ் வாக்குறுதியளித்துள்ளார்.

Intro:Body:

odisha schools

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.