ETV Bharat / bharat

கரோனா குறித்து தவறான தகவல் பரப்பிய ஆசிரியர் கைது - கரோனா குறித்து தவறான தகவல் பரப்பிய ஆசிரியர் கைது

புவனேஷ்வர்: ஒடிசாவில் கரோனா குறித்து தவறான தகவலை பரப்பிய அரசு பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Teacher
Teacher
author img

By

Published : Mar 15, 2020, 11:14 PM IST

ஒடிசா மாநிலம் காலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிந்து மகானந்த். டூட்கேல் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவரும் இவர், வாட்ஸ்அப்பில் கரோனா குறித்த தவறான தகவலை பகிர்ந்துள்ளார். பெங்களூருவிலிருந்து வந்த நபர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கலியகனி கிராமத்தில் வசித்துவருவதாகவும் வாட்ஸ்அப்பில் செய்தி பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பகிரப்பட்டது தவறான செய்தி என தெரியவந்ததையடுத்து, மகானந்தை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டபோது, தனது செல்போனை பயன்படுத்தி யாரோ வதந்தியை பரப்பி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இதுவரை 109 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தவறான தகவல்களை யாரும் பகிர வேண்டாம், அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதையும் படிங்க: கேரளாவில் மேலும் 2 பேருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.