நுபாடா (ஒடிஸா): சாலை வசதி சரிவர இல்லாததால் கர்ப்பிணியை 4 கிலோமீட்டர் தூரம் உறவினர்கள் சுமந்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சாலை இணைப்பு சரியாக இல்லாததால் அவசர ஊர்தி சரியான நேரத்தில் கிராமத்தை அடையத் தவறியதாக உறவினர்கள் கூறியுள்ளனர். அதனால் கர்ப்பிணிப் பெண்ணை 4 கி.மீ தூரத்திற்கு தற்காலிக டோலி அமைத்து தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நுபாடா மாவட்டத்தின் கதியாலா தொகுதியில் உள்ள சமத்பதர் கிராமத்தில் நடந்துள்ளது. கர்ப்பிணி ரெமதி மஜியை, அவரது கணவர் காகேஷ்வர் மஜி உடன் பல கிராமவாசிகள் இணைந்து ஆபத்தான நிலையில் 4 கிலோ மீட்டர் சுமந்துச் சென்று அவசர ஊர்தியில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்