ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் ஊரடங்கினால் பசியோடிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உணவளிக்கவோ, பாதுகாக்கவோ யாருமில்லை. ஆதரவற்ற அப்பெண்ணை மனிதநேயத்தோடு அணுகிய கட்டாக் மாவட்ட காவல் ஆய்வாளர், பசியிலிருந்த அவருக்கு உணவு கொடுக்க முடிவு செய்தார்.
தன் சொந்த மகளை கவனிப்பது போல, மனநலம் பாதித்த பெண்ணின் அருகில் அமர்ந்து உணவூட்டினார். பின்னர், துணை காவல் ஆய்வாளர் பார்ஷா மொஹந்தி பருப்பு சாதம் அளித்தார். கடமைக்கு நடுவில், மனிதநேயத்தோடு இதுபோன்ற சேவைகளில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் நம்பிக்கையளிக்கின்றனர்.
இதையும் படிங்க: கோவிட் - 19 தொற்றுக்குப் பிறகான உலகம் - இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் கருத்து