ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் நுசாஹி கிராமத்தை சேர்ந்தவர் புதரம் சிங். இவரின் அத்தை சம்பா சிங்கும் அதே கிராமத்தில்தான் வசிக்கிறார். சம்பா சிங்குக்கு சூனிய தந்திரங்கள் தெரியும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், புதரம் சிங்கின் மகள் மூன்று நாள்களுக்கு முன்பு விநோத முறையில் உயிரிழந்துள்ளார். இதில் விரக்தியடைந்த புத்ரம், தனது மகளை சம்பாதான் சூனியம் வைத்து கொலை செய்துள்ளார் என கருதியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த புத்ரம் நேராக சிம்பா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த சிம்பாவை தரதரவென வெளியே இழுத்து வந்து கையில் வைத்திருந்த கோடாரியால் தலையை வெட்டி கொலை செய்துள்ளார். இச்சம்பவத்தின்போது பலர் அப்பகுதியிலிருந்தும் காப்பாற்ற முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.
பின்னர், வெட்டிய தலையை துணியால் மூடிக்கொண்டு புறப்பட்ட புத்ரம், 13 கிலோ மீட்டர் தூரம் நடந்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தலையுடன் வந்ததால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், புத்ரமை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.