ETV Bharat / bharat

கைத்தறி விற்பனைக்காக ப்ளிப்கார்ட்டுடன் கைகோர்த்த ஒடிசா அரசு! - ப்ளிப்கார்ட்டுடன் கைகோர்த்த ஒடிசா அரசு

புபனேஷ்வர்: நெசவாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள் ஆகியோரின் தயாரிப்புகளை நாடு முழுவதும் விற்பனை செய்வதற்காக ஒடிசா அரசு, இணைய வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட்டுடன் கைகோர்த்துள்ளது.

odisha-govt-inks-pact-with-flipkart-to-promote-handloom-handicrafts

author img

By

Published : Jul 20, 2020, 4:01 PM IST

ஒடிசாவின் இக்கத் சேலைகள், சம்பல்புரி சேலைகள், வெள்ளி ஆபரணங்கள், பட்டாசித்ரா ஓவியங்கள், துணி வகைகள் ஆகியவை நாடு முழுவதும் பிரபலமானவை. ஒடிசாவின் கைத்தறி மற்றும் கைவினை பொருள்களுக்கு பல மாநிலங்களில் கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒடிசாவின் தயாரிக்கப்படும் கைத்தறி பொருள்களின் விற்பனையை நாடு முழுவதும் அதிகரிக்க ஒடிசாவின் கலை மற்றும் கைவினை மேம்பாட்டுக்கான மாநில நிறுவனத்தின் சார்பாக இணைய வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலை மற்றும் கைத்தறி மேம்பாட்டுத் துறையின் கூடுதல் செயலாளர் கேசி சாஹோ பேசுகையில், ''ப்ளிப்கார்ட் போன்ற இணைய வர்த்தக நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளதால் ஒடிசாவில் உள்ள அனைத்து கைவினை கலைஞர்களும் தங்களது தயாரிப்புகளை நாடு முழுவதும் நுகர்வோர் முன்பு காட்சிப்படுத்த முடியும்.

இதன்மூலம் பிராண்டிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் நிதி மேலாண்மை ஆகியவற்றை மக்களும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். அதேபோல் ஒடிசாவின் பாரம்பரியத்தையும், தனித்துவ அடையாளங்களையும் சந்தைப்படுத்த முடியும்'' என்றார்.

இதனைத்தொடர்ந்து ப்ளிப்கார்ட் தரப்பில் ராஜ்னேஷ் குமார் பேசுகையில், '' பொயோனிகா, உத்கலிகா, சம்பல்பூரி பஸ்த்ராலயா உள்ளிட்ட ஒடிசாவின் பிராண்ட்களை நாடு முழுவதும் சந்தைப்படுத்த ஆர்வமாக உள்ளோம். ஒடிசாவின் கைவினை பொருள்களுக்கு என்று எப்போதும் ஒரு அடையாளம் உண்டு. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள நெசவாளர்கள் உள்ளிட்டோருக்கு தங்களது பொருள்களை சந்தைப்படுத்த நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது'' என்றார்.

இதையும் படிங்க: கைவினை கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு முன்வர வேண்டும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.