ஒடிசாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூடக்கோரி முதலமைச்சர் நவின் பட்நாயக் அறிவித்துள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பொதுமக்கள் அனைவரும் விழிப்புணவர்வோடும், முன்னெச்சரிக்கையோடும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், பட்ஜெட் குறித்து நடைபெறவிருந்த சட்டமன்றம் வரும் மார்சு 29ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் சூர்யநாராயண தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இனிமை நிறைந்த உலகம் இருக்கு கொரோனா பற்றி கவலை எதற்கு...