பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின்படி, பத்திரிகையாளர்கள் கரோனாவால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு 15 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
”ஒடிசா மாநிலத்தில் கரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் ஊடகங்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. மக்களிடையே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கு ஊடகவியலாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். இத்தகைய சூழலில், பத்திரிகையாளர் எவரேனும் உயிரிழக்க நேரிட்டால், மாநில அரசின் சார்பில் அவருக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் 50 லட்சம் ரூபாய் நிதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்- மோடி