ஒடிசா மாநிலத்தில் பெண்களுக்கு ஆதரவாக பல நலத்திட்டங்களை செய்துவருகிறார் அம்மாநில முதலமைச்சரும் பிஜூ ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக். இவர் மக்களவைத் தேர்தலில் 33 விழுக்காடு பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அஸ்கா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு நளபந்தா கிராம சுயஉதவிக் குழுவின் தலைவர் பிரமீளா பிசோயை(68) வேட்பாளராக அறிவித்துள்ளார். இவரது இந்த அதிரடியான அறிவிப்பு அனைவரையும் வியக்கவைத்தது மட்டுமல்லாமல் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இவரது இந்த அறிவிப்பு பெண்களை மரியாதை செலுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று அனைவரும் கூறிவருகின்றனர்.
இது குறித்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறியதாவது, பெண்களுக்கு மரியாதை செலுத்தவே பிரமீளாவை வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளேன் என்றார்.
மேலும், இதற்கு முன்னர் மூன்று முறை இத்தொகுதியில் தான் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், தான் மட்டுமல்ல தனது தந்தை தந்தை பிஜூ பட்நாயக்கும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது சிறப்புமிக்க இத்தொகுதியில் பிரமீளாவை வேட்பாளராக களமிறக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.