ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்திள்ள இறால் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்துவந்த 90 பேர், தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால் பாதிப்பிற்குள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலாசோர் மாவட்டம் காண்டபடா கிராமத்தைச் சேர்ந்த இந்த இறால் தொழிற்சாலையின் தொழிற்கூடத்தின் ஒரு பகுதியில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கே வேலை செய்துவந்த தொழிலாளர்கள் மூச்சுத் திணறலுக்குள்ளாகி, மயக்கமடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளும் உள்ளூர் காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.
பாதிப்பிற்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் காண்டபடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏனையோர் பாலசோர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: