ETV Bharat / bharat

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பிஷப் முலக்கலின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது! - உச்ச நீதிமன்றம்

டெல்லி: கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி பிஷப் பிராங்கோ முலக்கல் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு : பிஷப் முலாக்கலின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

author img

By

Published : Aug 5, 2020, 9:41 PM IST

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுவரை பல சந்தர்ப்பங்களில் பிஷப் முலக்கல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிப்படையாக குற்றம்சாட்டினார். அவரது இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பிஷப் தங்களிடமும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக மேலும் மூன்று கிறித்தவ சபை ஊழியப் பெண்களும் சாட்டினர்.

இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட பிஷப் பிராங்கோ முலக்கல், கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிஷப் முலக்கலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பாக கோட்டயம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை பிணை பெற்று வெளியே வந்தவர், சாட்சியங்களை அழிக்க முற்பட்டதாக அறிய முடிகிறது.

இது, நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பிணையை, கடந்த ஜூலை 1ஆம் தேதி ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த வழக்கில் இருந்து முலக்கலை விடுவிக்கக் கோரிய மனுவை கேரள உயர் நீதிமன்றம் ஜூலை 7ஆம் தேதி தள்ளுபடி செய்தது. பாலியல் வன்கொடுமை புரிந்த வழக்கில் முலக்கலுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, அவரை விடுதலை செய்ய கேரள நீதிமன்றம் மறுத்தது.

இதனையடுத்து, தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பிஷப் பிராங்கோ முலக்கல் மேல்முறையீடு செய்தார். அவரது மேல் முறையீடு மனு இன்று(ஆக.5) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (சி.ஜே.ஐ) சரத் அரவிந்த் போப்டே தலைமையிலான அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் முலக்கல் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்," பிஷப் முலக்கல் தவறிழைக்காதவர். குற்றமற்றவர்.

பாதிக்கப்பட்டதாக சொல்லும் கன்னியாஸ்திரி, தேவாலயத்தின் நிதியை முறையற்ற வகையில் கையாண்டதைக் கேள்வி கேட்டதால் பிஷப் மீது இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எனவே, இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார். இதனை மறுத்த அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், " கன்னியாஸ்திரிக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் பிஷப் பிராங்கோவுக்கு எதிராக வலுவான சான்றுகள் இருப்பதால், அவரை விடுதலை செய்யக்கூடாது.

விசாரணையை தாமதப்படுத்தவே அவர் அடிக்கடி மேல்முறையீட்டு மனுக்களை தொடுக்கிறார்" என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், பிஷப் பிராங்கோ முலக்கலை விடுதலை செய்ய முடியாது" என்றுக்கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.