கரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 832 விமானங்கள் இயக்கப்பட்டு 58 ஆயிரத்து 318 பயணிகள் பயணம் செய்தனர் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திக் சிங் பூரி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பன் புயல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுத்துள்ளது. இந்த மாதம் 28ஆம் தேதி முதல் மேற்கு வங்க மாநிலத்திலும் விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு!