ETV Bharat / bharat

'விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பைப் பெற இயலவில்லை' - இஸ்ரோ தகவல்

பெங்களூரு: விக்ரம் லேண்டர் உடனான தகவல் தொடர்பை மீண்டும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. No Communication

#VikramLander
author img

By

Published : Sep 10, 2019, 10:57 AM IST

சந்திரயான் 2 விண்கலத்தின் 'விக்ரம்' லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் சவாலான பணியை இஸ்ரோ கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1:30 மணியளவில் மேற்கொண்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக 'விக்ரம்' லேண்டருடான இஸ்ரோவின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளும் பலனிக்கவில்லை.

இதனிடையே லேண்டர் பற்றி விளக்கமளித்த இஸ்ரோ தலைவர் சிவன், விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க நான்கு கட்டங்களில் செயல்பட்ட நிலையில், கடைசி கட்டத்தை சரியாக செயல்படுத்த தவறியதால், விக்ரம் லேண்டருடனான தொடர் துண்டிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். அடுத்து 14 நாட்களில் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முயற்சிப்போம் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கண்டுபிடித்தாலும் இதுவரை எந்தத் தகவலும் லேண்டரிலிருந்து கிடைக்கவில்லை என்றும் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை எனவும் இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அறிவித்துள்ளது.

Intro:Body:

ISRO: #VikramLander has been located by the orbiter of #Chandrayaan2, but no communication with it yet. All possible efforts are being made to establish communication with lander.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.