பெங்களூருவை தலைமையிடமாக கொண்டுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனமான பிக்சல், தனது செயற்கைக்கோளை ஏவ இஸ்ரோவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தனது ட்விட்டரில், "டிசம்பர் 3, 2020 அன்று, நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட், விண்வெளித் துறை இரண்டும் பிக்சல் என்ற தனியார் நிறுவனத்தின் முதல் செயற்கைக்கோளை விண்ணில் ஏவ ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த செயற்கைக்கோள் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 வயதான அகமது மற்றும் கிஷிஜ் கண்டேவால் ஆகியோரால் தொடங்கப்பட்டுள்ள பிக்சல் ல்டார்ட்அப் நிறுவனம், இந்த செயற்கைகோளில் இருந்து கிடைக்கும் புகைப்படங்களை பல வகையில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
முன்னதாக ரஷ்யாவுடன் பிக்சல் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த ஒப்பந்தம் இஸ்ரோவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்துடன் இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும். மேலும் வரும் காலங்களில் இதேபோல் இன்னும் அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஏழை மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் முன்னாள் பிரதமர்!