குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். நாட்டின் முக்கிய நகரங்களில் பேரணிகள் நடத்தப்பட்டுவருகின்றன. சட்டத்திற்கு எதிராகப் போராடிய பல தலைவர்கள், எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூர், "குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் அரசியல் நோக்கத்திற்காக தூண்டிவிடப்பட்டவை.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை சமூக அகதிகளுக்கே குடியுரிமை வழங்கப்படுகிறது. இந்திய குடிமக்களிடமிருந்து குடியுரிமை பறிக்கப்படாது. சட்டம் குறித்து தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை முன்வைத்து நாங்கள் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை" என்றார்.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட் முதலமைச்சராகிறார் ஹேமந்த் சோரன்!