ETV Bharat / bharat

கரோனா பாதிப்பு: என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் உயிரிழப்பு!

author img

By

Published : Jul 28, 2020, 12:39 PM IST

புதுச்சேரி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாலன், நேற்று (ஜூலை 27) இரவு உயிரிழந்தார்.

கரோனா பாதிப்பு: என் ஆர் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் உயிரிழப்பு!
General secretary dead by corona

புதுச்சேரியில் எதிர்க்கட்சியான என்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலன். இவர் கடந்த ஆட்சியில் நியமன சட்டப்பேரவை உறுப்பினராகவும், பாப்ஸ்கோ நிறுவனத்தின் சேர்மனாகவும் பணியாற்றினார்.

68 வயதான இவர், என்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். இவர் கடந்த 23ஆம் தேதி கரோனா தொற்று காரணமாக மணக்குள விநாயகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்ததால் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று (ஜூலை 27) இரவு உயிரிழந்தார். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி உயிரிழந்த சம்பவம் அறிந்த அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதேபோன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.