இது குறித்து புவனேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த இடைத்தேர்தலில் 21 நாள்கள் தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தோம். அதற்காக எங்களுடன் பணியாற்றிய கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விதிமீறல்களை காவல் துறையும் தேர்தல் ஆணையமும் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் நாளன்று அனைத்து வீடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இது குறித்து புகாரளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பணம், பரிசுப்பொருள்கள், இலவச கேபிள் இணைப்பு உள்ளிட்டவை கொடுத்து ஆளுங்கட்சி வேட்பாளர் வாக்குப் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் ஏராளமான பரிசுப் பொருள்களும் டோக்கனும் வழங்கி வெற்றிபெற்றுள்ளார். இந்த வெற்றியை எதிர்த்து சில நாள்களில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடுத்த 24 மணி நேரத்தில் க்யார் புயலின் தீவிரம் அதிகரிக்கும்! - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்