தேசிய மக்கள்தொகை பதிவெடு, மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்பணிகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உயர்மட்ட அரசு அலுவலர்கள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு அடுத்த இரண்டு மூன்று நாள்களில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திட்டமிட்டபடி ஏப்ரல் 1ஆம் தேதி பணிகள் தொடங்கும் என உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. இதனை அமல்படுத்துவதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், பஞ்சாப், சத்தீஸ்கர், பிகார் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இப்பணிகள் கடைசியாக 2010ஆம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: தெலங்கானாவை முடக்க உத்தரவு