வஞ்சித் பகுஜன் அகாதி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை புதுப்பிக்க மத்திய அரசு மூவாயிரத்து 941 கோடியே 35 லட்சத்தை டிசம்பர் 24ஆம் தேதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசின் கூற்றுப்படி, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) என்பது நாட்டின் வழக்கமான குடியிருப்பாளர்களின் பட்டியலாகும்.
வழக்கமான குடியிருப்பாளர் என்பது கடந்த ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலமாக ஒரு உள்ளூர் பகுதியில் வசித்த நபர் அல்லது வசிக்க விரும்பும் ஒரு நபர் என வரையறுக்கப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பத்தின் சாதி மற்றும் சித்தாந்த தகவல்களைப் பெறுவதே அரசாங்கத்தின் நோக்கம். இது நரேந்திர மோடி அரசாங்கத்தின் தீய வடிவமைப்பு.
இவ்வாறு பிரகாஷ் அம்பேத்கர் கூறினார்.
மேலும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, வருவாய் பற்றாக்குறை மற்றும் நவரத்னா என்று அழைக்கப்படும் உயர் மதிப்புடைய அரசு சொத்துகள் விற்பனை ஆகியவற்றிற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்) 2010ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம், 1955 மற்றும் 2003ஆம் ஆண்டு குடியுரிமை விதிகள் ஆகியவற்றின் கீழ் தயாரிக்கப்பட்டது. இது 2015ஆம் ஆண்டில் ஆதாருடன் இணைக்கப்பட்டது.
அரசு தகவலின்படி அசாம் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 70 ஆண்டுகளுக்கு பிறகும் அரசியலமைப்பு உயிர்ப்புடன் உள்ளது - பிரகாஷ் அம்பேத்கர் சிறப்பு பேட்டி