ETV Bharat / bharat

கங்கனா ரணாவத்துக்கு போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பா? மகாராஷ்டிரா அரசு விசாரணைக்கு உத்தரவு

author img

By

Published : Sep 8, 2020, 4:52 PM IST

மும்பை: மகாராஷ்டிரா அரசிற்கு எதிராக கருத்து மோதல் நடந்துவரும் நிலையில், நடிகை கங்கனா ரணாவத், போதைப்பொருள் உட்கொண்டதாக நடிகர்கள் கூறிய கூற்றுக்கள் குறித்து விசாரணை நடத்த மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார்.

கங்கனா ரனாவத் போதைப் பொருள் உட்கொண்டாரா? விசாரணைக்கு உத்தரவு

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கடந்த சில நாள்களாக மகாராஷ்டிரா அரசிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துவருகிறார். பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும், திரைமறைவில் இருக்கும் மாஃபியாக்கள் குறித்தும் சமீபத்தில் கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இதனால் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.

நடிகை கங்கனா ரணாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மத்தியஅரசு வழங்கியது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மகாராஷ்டிரா அமைச்சர் ஒருவர் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை கங்கனா ரணாவத், போதைப்பொருள் உட்கொண்டதாக நடிகர்கள் கூறிய கூற்றுக்கள் குறித்து விசாரணை நடத்த மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாள்களாக தனது தொடர் அறிக்கைகள் மூலம் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் நல்மதிப்பை களங்கப்படுத்தியதற்காக ரணாவத் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவை ஒருமனதாக தீர்மானம் எடுக்க வேண்டும் என்று அம்மாநில அமைச்சர் சர்னைக் கோரியிருந்தார்.

திரைப்பட பிரபலங்கள் போதைப்பொருளை உட்கொண்டதாக ரணாவத் குற்றம் சாட்டியிருந்தாலும், சில நடிகர்களும் ரணாவத் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

தற்போது தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் உள்ள கங்கனா ரணாவத் புதன்கிழமை மும்பைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.