17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் சூழலில் இருக்கிறது.
இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ட்விட்டரில் கருத்து பதிந்துள்ளார். அதில், " வெற்றிபெற்றவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ஆனால், தேர்தலில் தோல்வியடைந்த அனைவரும் தோல்வியாளர்கள் அல்ல” என பதிவிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகள் குறித்து முழுமையாக ஆராய்ந்து பிரிசீலித்தப் பிறகு எங்களது கருத்துக்களை தெரிவிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதியில் 19 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.