கோவிட்-19 பரவலைத் தடுக்க கடுமையான விதிகளை அஸ்ஸாம் அரசு விதித்துள்ளது. தென்மாநிலங்கள், மேற்கு மாநிலங்களிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்கு குடிபெயர்ந்த வரத்தொடங்கியதும், ஒரே நாளில் 105 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப், மணிப்பூர் முதலமைச்சர், அஸ்ஸாம் சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் வடகிழக்கு மாநிலங்களில் ஊரடங்கை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். திரிபுரா முதலமைச்சர், தென், மேற்கு மாநிலங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளவர்கள் ஊரடங்கை மீறினால் ஆறு மாதம்வரை சிறையில் வைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், திரபுரா மாநில எல்லையில் 856 கி.மீ பன்னாட்டு எல்லையாக இருப்பதால், வங்கதேசத்திலிருந்து உள்நுழைபவர்களை கண்காணிக்க கடுமையான எல்லை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அம்மாநில எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்பட 161 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது 25 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மணிப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005படி கடும் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து மணிப்பூர் வந்தவர்கள் 7 நாள்கள் மருத்துவமனையிலும், 7 நாள்கள் தங்களது வீடுகளிலும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
மணிப்பூர் மாநில அரசு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி கரோனா இல்லாத மாநிலமாக இருந்தது. தற்போது, குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பிய நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் 24 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கதேச துறைமுகங்களை வடகிழக்கு மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்: மக்மூத் ஹாசன் பிரத்யேக பேட்டி