பாட்னா: கிஷான்கஞ்ச் பேரணியில் பேசிய முதலமைச்சர் நிதிஷ் குமார், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நினைத்து யாரும் அஞ்ச வேண்டும். யாரும் எவரையும் நாட்டை விட்டு விரட்ட முடியாது. சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். நாம் அனைவரும் இந்துஸ்தானின் மக்கள், இந்த பாரதத்தின் மக்கள்.
அமைதி, அன்பு, சகோதரத்துவம் நிறைந்த சமூகத்தை உருவாக்க இந்த அரசாங்கம் பாடுபடுகிறது. நாம் அனைவரையும் ஒன்றிணைக்க விரும்புகிறோம். ஆனால், சிலர் இந்த சமூக தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகின்றனர் என்றார்.
பிகார் சட்டப்பேரவையின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 3ஆம் தேதி நிறைவுற்றது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.