பெங்களூருவில் கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மாநில அரசு, மத்திய அரசிடம் வெள்ள நிவாரண நிதியாக 35 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருந்தது. இதற்கு மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. இப்படியிருக்கையில் முதலமைச்சர் எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்திருக்க கோரிக்கை வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் இதுவரை எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. இதில் இருந்தே இருவருக்கும் இடையேயான உறவில் நம்பகத்தன்மை குறைந்துள்ளதை வெளிப்படையாக காட்டுகிறது என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், நான் முதலமைச்சராக இருந்தப்போது பேரிடர் காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். எனது ஆட்சி காலத்தில் நிறைந்திருந்த அரசு கஜனாவை தற்போது எடியூரப்பா அரசு சுத்தமாக காலிசெய்துவிட்டு மத்திய அரசை நாடிவருகிறுது என குற்றம்சாட்டினார்.
மேலும் படிக்க: ’இந்திய ஹெலிகாப்டரை சுட்டு விழ்த்தியது மிகப் பெரிய தவறு’ - ஆர்.கே.எஸ். பதாரியா