கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில், மகாரஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில், அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஐம்பது நாள்களுக்குப் பிறகு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட நாள்களுக்குப் பிறகு மதுபானக் கடைகள் திறக்கப்படுவதால் மக்கள் அதிகளவில் கூடுவதைத் தடுக்கும் வகையில் இரண்டு நாள்களுக்கு முன்பே முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
ஆனால், ஊரடங்கினால் பல நாள்களாக வேலையிழந்த மக்கள் மதுபானம் வாங்குவதற்கு போதிய பணமில்லாததால் கடைகளுக்கு வரவில்லை. அதுமட்டுமின்றி தாங்களே தயாரித்த மதுப்பொருள்களை குடித்துப் பழகியதால், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் பதிலாக அரசிற்கு வருவாயை ஏற்படுத்த 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும்!