ETV Bharat / bharat

'எங்களிடம் நடக்காது' - பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை

மும்பை: 'மத்தியப் பிரதேசத்தில் நடப்பது போல் எங்களிடம் நடத்த முடியாது' என பாஜகவுக்கு சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

No such operation will be successful Maharashtra says Sanjay Raut  Shiv Sena on political situation in Madhya Pradesh  political situation in Madhya Pradesh  Sanjay Raut  மத்தியப் பிரதேச அரசியல் நிலவரம் குறித்து சிவசேனா  சிவசேனா, சஞ்சய் ராவத், மகாராஷ்டிரா ஆட்சி கவிழ்ப்பு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்

author img

By

Published : Mar 11, 2020, 3:13 PM IST

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி தானாகவே கவிழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும், அக்கட்சியினர் குதிரைபேரத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவிட்டனர் என்றும் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

ஏனெனில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜோதிராதித்ய சிந்தியா உள்பட 22 பேர் ராஜினாமா செய்துவிட்டனர். அவர்களில் ஆறு பேர் அமைச்சர்கள் ஆவார்கள். தற்போது இருதரப்பினரும் (காங்கிரஸ், பாஜக) தங்களது சட்டப்பேவரை உறுப்பினர்களை உயர்தர சொகுசு விடுதிகளில் தங்கவைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவர் எம்.பி. சஞ்சய் ராவத், பாஜகவின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முயற்சித்து பாஜக தோல்வியைத் தழுவியது. அத்தகைய நடவடிக்கைகள் இங்கு வெற்றி பெறாது.

இங்கிருக்கும் அறுவை சிகிச்சை திரையரங்கில் (அரசியல் களத்தில்), எங்களைப் போன்ற சிறந்த நிபுணர்கள் உள்ளனர். ஆகவே அறுவை சிகிச்சை செய்ய இங்கு யாராவது வந்தால், அவர்களுக்கு நாங்கள் அதனைச் செய்துவிடுவோம்” என்றார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சரத் பவாரின் உறவினர் அஜித் பவாரின் உதவியுடன் பாஜக ஆட்சியமைத்தது. இந்தக் கூட்டணி ஆட்சியை நீக்கிவிட்டு சிவசேனா ஆட்சிக்கு வந்தது.

சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன. இந்த மூன்று கட்சிகளும் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணியை மாநிலத்தில் அமைத்துள்ளன. முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பொறுப்பு வகிக்கிறார்.

இதையும் படிங்க: 'ஊழல் ஒரு ஓவியம்; காங்கிரஸ் அதன் ஓவியர்' - பிரியங்கா மீது பாஜக தாக்கு

For All Latest Updates

TAGGED:

Sanjay Raut
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.