ETV Bharat / bharat

இந்தியாவில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்திற்கு பற்றாக்குறையா? - இந்திய மருத்து உற்பத்தியாளர்கள் சங்கம்

கரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்திற்கு, இந்தியாவில் எவ்வித பற்றாக்குறையும் இல்லை என இந்திய மருந்து உற்பத்தியாளர்களின் சங்கத் தலைவர் விரன்சி ஷா (Viranchi shah) தெரிவித்துள்ளார்.

no-shortage-of-hydroxychloroquine-in-india-idma-gujarat-chairman

author img

By

Published : Apr 24, 2020, 7:29 PM IST

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மலேரியாவுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இதனிடையே அமெரிக்காவின் எச்சரிக்கையால், அதன் மீதான ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டது.

இதன் மூலம் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என மக்களிடையே கேள்வி எழுந்த நிலையில், இந்திய மருந்து உற்பத்தியாளர்களின் சங்கத் தலைவர் விரன்சி ஷா (குஜராத்) செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், ''ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்திற்கு எவ்வித பற்றாக்குறையும் ஏற்படவில்லை. இந்த மாதத்தில் 35 முதல் 40 கோடி வரை ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை உற்பத்தி செய்துள்ளோம்.

இது வழக்கத்தை விட 10 மடங்கு அதிகமாகும். உலக அளவில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை 70 விழுக்காடு இந்தியா தான் தயார் செய்து வருகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்னதாக மலேரியா, ஆத்ரிட்டிஸ் நோய்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பயன்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டில் 2.4 கோடி மாத்திரைகளை மட்டும் இந்தியாவில் தயார் செய்துள்ளோம். ஆனால், இப்போது நிலைமை வேறாக உள்ளது.

இந்திய மருந்து உற்பத்தியாளர்களின் சங்கத் தலைவர் விரன்சி ஷா

பாராசிட்டமல் மருந்துகளை தயார் செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. நாம் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்துவருகிறோம்.

ஊரடங்கு உத்தரவின் போது, அரசு நிர்வாகத்தின் உதவியுடன் மருந்துகள் தயாரிக்க உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு தொடக்கத்தில் கடினமாக இருந்தது. பின்னர் இந்தப் பிரச்னை அரசுக்கு தெரிய வந்தபின், சரிசெய்யப்பட்டுவிட்டது.

பணிக்கு அனைத்துத் தொழிலாளர்களையும் ஈடுபடுத்தவில்லை. ஆனால், அது உற்பத்தியை பாதிக்கவில்லை'' என்றார்.

இதையும் படிங்க: ஊரடங்கு என்ற தாழ் போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்? - சிதம்பரம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.