ஜார்க்கண்டில் உள்ள பிஷ்ராம்பூர் சட்டசபைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் இவ்வாறு கூறினார். மேலும் அவர் தனது உரையில், “பிரான்சில் இருந்து நாடு கையகப்படுத்திய ரஃபேல் போர் விமானங்கள் எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும். அயோத்தியில் ஒரு பெரிய ராமர் கோயில் கட்டப்படும். உலகில் எந்த சக்தியும் அது நடப்பதைத் தடுக்க முடியாது. கோயில் கட்டுமானத்திற்கான தடை உச்ச நீதிமன்றத்தால் அகற்றப்பட்டுள்ளது.
1952ஆம் ஆண்டில், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி (பாஜகவின் முன்னோடி, பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர்) இரண்டு அரசியலமைப்புகள், இரண்டு பிரதமர்கள் மற்றும் இரண்டு வாக்காளர்கள் இருக்க முடியாது என்று கூறியிருந்தார். நாங்கள் அவருடைய கனவை நிறைவேற்றி உள்ளோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி நடந்தும் வருகிறோம்” என்றார்.
நக்ஸலைட்டுகள் பாதிப்பு மிகுந்த ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. வருகிற 30ஆம் தேதி (நவ.30) முதல் கட்டமாக பிஷ்ராம்பூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்தத் தொகுதியில் பாஜகவின் அம்மாநில மூத்த தலைவரும், அமைச்சருமான ராம்சந்திர சந்திரவன்ஷி களம் காண்கிறார்.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: 25ஆம் தேதி பிரதமர் மோடி பரப்புரை!