இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அபாயம் நிலவி வரும் சூழலில், இதுவரை 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமான ஜம்மு - காஷ்மீர் 24x7 தீவிர கண்காணிப்பில் உள்ளதாக அம்மாநில முதன்மை செயலர் ரோஹித் கன்சல் தெரிவித்துள்ளார். இந்தியா தற்போது தென்கொரியா, இத்தாலி, ஈரான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல பயணக் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், நேற்று ஜம்மு மாநிலத்தில் 21 சுற்றுலாப் பயணிகள் கொரோனா பாதிப்பிற்குள்ளானதாக சந்தேகம் எழுந்தது.
பின்னர் அவர்களை சோதனைக்குட்படுத்தியதில் நோய் பாதிப்பு இல்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது குறித்து முதன்மை செயலர் ரோஹித், ' வெளிநாட்டிலிருந்து ஜம்மு காஷ்மீர் வரும் பயணிகளின் விவரங்களை தொடர்ச்சியாக நாங்கள் மத்திய அரசுடன் பகிர்ந்து வருகிறோம். சிறப்பான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதால் காஷ்மீர் வாசிகள் பீதியடையவேண்டாம்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் மாறும் கூட்டணி கணக்கு?