கரோனா வைரஸ் நோய் இந்தியா முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்ததாக வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டதால், வெளிமாநில தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உணவு போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தவித்த அவர்கள் தங்கள் மாநிலத்திற்கு நடந்தே செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கான தேவைகளை அந்தந்த மாநில அரசுகள் செய்து தர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனிடையே, ஊரடங்கு நீட்டிக்கப்படும் என செய்திகள் வெளியான நிலையில், அதற்கான திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
Alert : There are rumours & media reports, claiming that the Government will extend the #Lockdown21 when it expires. The Cabinet Secretary has denied these reports, and stated that they are baseless#PIBFactCheck#lockdownindia #coronaupdatesindia #IndiaFightsCorona
— PIB India 🇮🇳 #StayHome #StaySafe (@PIB_India) March 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Alert : There are rumours & media reports, claiming that the Government will extend the #Lockdown21 when it expires. The Cabinet Secretary has denied these reports, and stated that they are baseless#PIBFactCheck#lockdownindia #coronaupdatesindia #IndiaFightsCorona
— PIB India 🇮🇳 #StayHome #StaySafe (@PIB_India) March 30, 2020Alert : There are rumours & media reports, claiming that the Government will extend the #Lockdown21 when it expires. The Cabinet Secretary has denied these reports, and stated that they are baseless#PIBFactCheck#lockdownindia #coronaupdatesindia #IndiaFightsCorona
— PIB India 🇮🇳 #StayHome #StaySafe (@PIB_India) March 30, 2020
இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி அறிக்கையில், "ஊரடங்கு நீட்டிக்கப்படும் என வதந்திகள், செய்திகள் வெளியாகிவருகின்றன. ஆனால், அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா இம்மாதிரியான அடிப்படையற்ற செய்திகளை மறுத்துள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு குறித்து ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், "ஊரடங்கு மக்களிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நோயை கட்டுப்படுத்த ஊரடங்கை தவிர வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் பெரும்பாலான ஏழை மக்கள் தினக்கூலியை நம்பியே உள்ளார்கள். எனவே, இம்மாதிரியான ஊரடங்கால் அவர்களின் பொருளாதாரம் பாதிப்படையும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா: வாட்ஸ்அப் எடுத்த முடிவால் பயனாளர்கள் அதிருப்தி